திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே, திருமணமான ஐந்து நாள் களில் புதுமாப்பிள்ளையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமனார் உட்பட இருவர் சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், சிங்களாந்தி மங்களநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் சிற்றரசன். நகராட்சி ஊழியரான இவரது மகன் முத்தரசனும், 25, அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் அரவிந்தியாவும், 22, இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 13ஆம் தேதியன்று இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
மகள், மருமகனை மறுவீட்டிற்கு அழைத்து ரவிச்சந்திரன் கறிவிருந்து வைத்துள்ளார்.
அப்போது நண்பர்களுடன் சேர்ந்து முத்தரசன் மது குடித்துள்ளார். ஏன் குடித்தீர்கள்? என்று கேட்ட மனைவி அரவிந்தியாவை முத்தரசன் அடித்துத் தாக்கியுள்ளார். உடனே, எதற்காக என் மகளை அடித்தாய்? என அரவிந்தி யாவின் தந்தை கேட்டுள்ளார். அவரையும் முத்தரசன் தாக்கினார்.
பொறுமை இழந்த மாமனார் அரிவாளை எடுத்து வந்து முத்தரசனை வெட்டினார். சம்பவ இடத்திலேயே முத்தரசன் இறந்தார். ரவிச்சந்திரன் திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார். விசாரணை தொடர்கிறது.
கொல்லப்பட்ட மருமகன் முத்தரசன் (நடுவில்), கைது செய்யப்பட்ட மாமனார் ரவிச்சந்திரன். படம்: தமிழக ஊடகம்

