பிரேமலதாவை தலைவராக்க வலியுறுத்து

பிரேமலதாவை தலைவராக்க வலியுறுத்து

1 mins read
05c88ec6-6098-4158-88d4-1b80f8b758c9
-
Google News Preferred Icon

சென்னை: தேமுதிக தலைவராக அல்லது செயல் தலைவராக பிரேமலதா விஜயகாந்தை நியமிக்க வேண்டும் என அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நேற்று முன்தினம் அக்கட்சியின் மாவட்டச் செய லாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கட்சி பொருளாளரான பிரேமலதா தலைமை வகித் தார். அக்கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர்கள் பலரும், பிரேமலதாவை கட்சித் தலைவராக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், விஜயகாந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, விஜய காந்தின் இரு மகன்களில் ஒருவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் சிலர் பிரேமலதாவிடம் வலியுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை பொறுத்திருக்க பிரேமலதா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.