புதுச்சேரியில் உள்ள தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுக கடற்கரையோரமாக 15 மீட்டர் நீளம், 2.5 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது. அதனை அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் ஆர்வமாகத் திரண்டு வந்து பார்த்துச் சென்றனர். திமிங்கிலச் சுறா அல்லது அம்மணி உளுவை என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றிலும் மிகப்பெரியவை ஆகும். தனித்து வாழும் இவ்வகை மீன்கள், நாள்தோறும் 2.6 டன் உணவை உட்கொள்ளும். இந்த திமிங்கிலம் கப்பல் போன்றவற்றில் அடிபட்டு இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். படம்: ஊடகம்
புதுச்சேரி கடற்கரையோரம் ஒதுங்கியது ராட்சத திமிங்கிலம்
1 mins read
-

