'கணவர் இறந்தாலும் மூவரை உயிர் வாழவைத்துள்ளார்'

2 mins read
e0bdce28-7817-4abd-8b13-0326e3cdb5db
கணவர் செல்வ ராஜ், குழந்தை களுடன் சுபத்ரா தேவி.படம்:தமிழக ஊடகம் -

சம­ய­பு­ரம்: தனது கண்­ணான கண வரின் உட­லு­றுப்­பு­க­ளைத் தானம் செய்து, மூவ­ரின் வாழ்க்­கை­யில் ஒளி­யேற்­றி­யுள்­ளார் மனைவி சுபத்ரா தேவி.

சம­ய­பு­ரம், சோழன்­ந­க­ரைச் சேர்ந்­த­வர் லாரி ஓட்­டு­நர் செல்­வ­ராஜ், 47. கடந்த ஜூலை மாதம் சென்னை தேசிய நெடுஞ்­சாலை விபத்­தில் மூளைச் சாவு அடைந்த இவ­ரது உடல் உறுப்­பு­க­ளைத் தான­மாக வழங்கி அர­சின் பாராட்டு களைப் பெற்­ற­வர் சுபத்ரா தேவி.

இந்­நி­லை­யில், "கண­வரை இழந்த பிறகு அன்­றாட வாழ்க்­கைக்­குத் தேவை­யான வரு­மா­னம் தடை ­பட்­டது மட்­டு­மின்றி குழந்­தை­க­ளின் படிப்­பும் கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது. எனவே, வாடகை வீட்­டில் வசித்து வரும் தங்­க­ளுக்கு தமி­ழக அரசு உதவ முன்­வர வேண்­டும்," என்று சுபத்ரா தேவி கோரியுள்ளார்.

"உடல் உறுப்­பு­கள் தானத்­திற்கு ஆரம்­பத்­தில் படிப்­ப­றிவு இல்­லாத நான் மறுத்­து­விட்­டேன். ஆனால், எனது மகன் அசோக்­ராஜ், 19, மகள் கங்­கா­ஷர்மி, 17, அளித்த ஊக்­கத்­திற்­குப் பிறகு ஒப்­புக்­கொண்­டேன்.

"கடந்த ஜூலை மாதம் விபத்­தில் சிக்கி மூளைச்­சாவு அடைந்த என் கண­வ­ரின் உடல் உறுப்­பு­கள் மூலம் மூவர் உயிர் வாழ இருப்­ப­தாக அரசு மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

"என் வாழ்க்­கையே பறி­போ­ன­தாக உணர்ந்த நான், என் கண­வ­ரால் மூவர் உயிர் பிைழத்­ததை நினைத்து நிம்­மதி அடை­கி­றேன்," என்­கி­றார் சுபத்ரா.

"எனது கண­வர் உடல் உறுப்­பு­களைத் தானம் பெற்­ற­வர்­களை நான் சந்­திக்க ஆர்­வம் காட்­ட­வில்லை. அவர்­க­ளுக்கு எதா­வது ஒன்று எனில், அவற்றை தாங்கிக்­ கொள்­ளும் மன­நிலை என்­னி­டம் இல்லை," என்கிறார் சுபத்ரா.

என் கணவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், உடல் உறுப்புகள் தானத்தால் இன்னும் அவர் உயிர்வாழ்ந்து வருவதாகவே நிம்மதி அடைகிறேன்.

மனைவி சுபத்ராதேவி