'இனி எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன்' என உறுதிமொழிப் பத்திரம் வழங்கும் ரவுடிகள்

'இனி எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன்' என உறுதிமொழிப் பத்திரம் வழங்கும் ரவுடிகள்

1 mins read
bfd81495-80ed-4015-80d7-1036b329154b
உடலெங்கும் தங்க நகைகளை அணிந்துகொண்டு நடமாடும் நகைக்கடைபோல மதுரை வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்த வரிச்சியூர் செல்வம். படம்: ஊடகம் -
Google News Preferred Icon

மதுரை: குற்­றச்­செ­ய­லைத் தடுக்­கும் வித­மாக மாவட்ட காவல்­து­றை­யினர் முன்­னாள் பிர­பல ரவுடி வரிச்­சி­யூர் செல்­வத்­தி­டம் 'இனி எந்தக் குற்றச்செயல்­க­ளி­லும் ஈடு­பட மாட்­டேன்' என உறு­தி­மொழிப் பத்­தி­ரம் எழுதி வாங்­கி­யுள்­ள­னர்.

இவர்மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து, போலிஸ் துணை அதிகாரி பாஸ்கரன் கூறுகையில், "மாவட்டத்தில் 50 பேரிடம் உறுதி மொழிப் பத்திரம் வாங்க உள்ளோம். அவர்களில் ஒருவர்தான் செல்வம். இது வரை 27 பேரிடம் வாங்கியுள் ளோம். தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்படுவர்,'' என்றார்.

தமி­ழக டிஜிபி சைலேந்­தி­ர­பாபு உத்­த­ர­வின்­பே­ரில், அண்மையில் தமி­ழ­கம் முழு­வதும் கொலை, கொள்ளை உள்­ளிட்ட குற்­றச்­செ­யல்­க­ளு­டன் தொடர்புடைய ரவு­டி­களின் வீடு­களில் போலி­சார் நடத்­திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். நுாற்றுக்கணக்கான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து சோதனை நடந்துவரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் இதுவரை 313 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்­நி­லை­யில், வரிச்­சி­யூர் செல்­வத்திடம் உறு­தி­மொழிப் பத்­தி­ரம் எழுதி வாங்­கி­னர்.

இதற்­கு­ப் பிறகும் அவர் சிறு குற்­றச்­செ­ய­லில் ஈடு­பட்­டா­லும்கூட கைது செய்­யப்­பட்டு ஓராண்­டுக்கு வெளி­யில் பிணையில் வர­மு­டி­யா­த­படி சிறை­யில் அடைக்­கப்­படு­வார் என போலிசார் கூறியுள்ளனர்.