மதுரை: மது போைதக்கு அடிமையான தனது மகனை எவ்வளவு சொல்லியும் திருத்தமுடியாத நிலையில், மகனைக் கொன்ற தந்தை வாடிப்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இதனால், கடந்த 11ஆம் ேததி அன்று திருமணம் நடைபெற இருந்த வீடு துக்கவீடாக மாறிய தால், திருமண வீடு கண்ணீரும் கதறுலுமாக மாறியது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அய்யனகவுண்டன் பட்டியைச் சேர்ந்த தொழிலாளி இளங்கோவன். இவரது மகன் பிரதீப்புக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்தது.
திருமண வேலைகளில் இளங்கோவன் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது, மது குடித்துவிட்டு நிதானமில்லாமல் வீட்டுக்குத் திரும்பிய மணமகன் பிரதீப், தன் நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் மது அருந்த தந்தை இளங்கோவனிடம் பணம் கேட்டுள்ளார்.
"நாளைக்கு திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படி அசிங்கப்படுத்துகிறாயே!" என்று தந்தை கடுமையாகத் திட்டியுள்ளார்.
"பணம் தரவில்லையென்றால் திருமணம் செய்யமாட்டேன்," என்று இளங்கோவனுடன் வாக்குவாதம் செய்துள்ளார் பிரதீப்.
இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில், அருகில் இருந்த கோடரியை எடுத்து இளங்கோவன் வெட்டியதில் பிரதீப் மரணமடைந்தார்.
"தமிழக அரசு மதுக்கடைகளை மூடவேண்டும். அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் இருக்கும் பல குடும்பங்களின் நிம்மதியை மது அழிக்கிறது. பல்வேறு குற்றங்கள் நடைபெற மதுவே காரணமாக உள்ளது," என்று நாட்டை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.ஜே.ராஜன் கூறியுள்ளார்.
-

