முன்னாள் முதல்வரின் பிறந்தநாளைக் கொண்டாட அடுக்கடுக்கான உறுதிமொழிகள்

1 mins read
d06f58ac-fc3c-4163-9d47-1b0c8992b212
-

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் திரு மு. கருணாநிதியின் பிறந்த நாளான இன்றைய தினத்தை கொண்டாடும் விதமாக மாநில அரசு புதிய மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளது.

சென்னையில் இரண்டு சிறப்பு மருத்துவமனைகள், திருவாரூர் மாவட்டத்தில் கிடங்குகள் கட்டுமானம் மற்றும் உலர்விப்பானை அமைத்துத் தருதல், மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்தல், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருதின் உருவாக்கம், ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடு வழங்குதல் எனப் பல்வேறு உறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

கொரோனா நிவாரணத் தொகை 2-வது தவணை; 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.