ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மதுப்புட்டிகள் கடத்தல்

1 mins read
5a3125c0-0a85-4eb0-abc7-26209ed9414d
-

பெரி­ய­பா­ளை­யம்: ஆந்­தி­ரா­வில் இருந்து ஆட்­டோ­வில் கடத்தி வரப்­பட்ட 250 மதுப்­புட்­டி­களைப் பறி­

மு­தல் செய்த பெரி­ய­பா­ளை­யம் மது­வி­லக்கு போலி­சார் அதன் தொடர்­பில் 12 பேரைக் கைது செய்­த­னர்.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த ஊர­டங்கு நடப்­பில் உள்­ள­தால் டாஸ்­மாக் மதுக்­க­டை­கள் மூடப்­பட்­டுள்­ளன.

இந்­தச் சூழ­லைப் பயன்­ப­டுத்தி கள்­ளச்­சந்­தை­யில் கூடு­தல் விலைக்கு மதுப்­புட்­டி­கள் விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக, தமி­ழ­கத்­தின் அண்டை மாநி­லங்­களில் இருந்து அதிக அள­வில் மதுப்­புட்­டி­கள் தமி­ழ­கத்­திற்கு கடத்தி வரப்­பட்டு, கள்­ளச்­சந்­தை­யில் கூடு­தல் விலைக்கு விற்­கப்­பட்டு வரு­வ­தாக போலி­சா­ருக்கு தக­வல் கிடைத்­தது.

இத­னைத் தடுப்­ப­தற்­காக தமி­ழக-ஆந்­திர எல்­லை­யான ஊத்­துக்­கோட்டை சோத­னைச் சாவ­டி­யில் மது­வி­லக்கு போலி­சார் வாகன சோத­னை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது இரு­சக்­கர வாக­னங்­கள், ஆட்டோ ஆகி­ய­வற்­றில் மதுப்­புட்­டி­க­ளைக் கடத்தி வந்த 12 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.