ரெம்டெசிவிர் கடத்திய எழுவர் கைது; முதல்வர் எச்சரிக்கை

1 mins read
2853a0e4-74b7-403d-ad1f-c5a78afa82db
-

சென்னை: கொவிட்-19 தொற்­றின் தீவி­ரத்­தன்­மை­யைக் குறைக்க உத­வும் ரெம்­டெ­சி­விர் மருந்தை பங்­ளா­தே­ஷில் இருந்து கடத்தி வந்த எழு­வர் கும்­பலை போலி­சார் கண்­டு­பி­டித்து, கைது செய்­த­னர்.

தமி­ழ­கத்­தில் நாளுக்கு நாள் கொரோனா பர­வல் அதி­க­ரித்து வரும் நிலை­யில், ரெம்­டெ­சி­விர் மருந்­துக்­குக் கடும் தட்­டுப்­பாடு நில­வு­கிறது. இதை­ய­டுத்து, அரசே அம்­ம­ருந்தை விற்­பனை செய்து வரு­கிறது.

ரெம்­டெ­சி­விர் மருந்தை வாங்க கூட்­டம் அலை­மோ­தும் நிலை­யில், சிலர் வெளி­நா­டு­களில் இருந்து அம்­ம­ருந்­தைக் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று, கொள்ளை லாபம் ஈட்­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், வாட்ஸ்­அப் வழி­யாக ரெம்­டெ­சி­விர் மருந்து விற்­கப்­ப­டு­வ­தாக கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில், தனி­யார் மருத்­து­வ­மனை ஒன்­றில் மருந்­தா­ளு­ந­ரா­கப் பணி­பு­ரி­யும் விஷ்ணு குமார் என்­ப­வரை போலி­சார் கைது செய்­த­னர்.

அவர் கொடுத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் கோவில்­பட்­டி­யைச் சேர்ந்த சண்­மு­கம், அவ­ரின் சகோ­த­ரர், சென்­னை­யைச் சேர்ந்த பிர­வீண் குமார், புவ­னேஸ்­வர் ஆகி­யோர் பிடி­பட்­ட­னர். புவ­னேஸ்­வ­ருக்கு ரெம்­டெ­சி­விர் மருந்தை விற்ற ராஜஸ்­தா­னைச் சேர்ந்த நிஷித் பண்­டாரி என்­ப­வ­ரும் அம்­மா­நில போலி­சா­ரால் கைது செய்­யப்­பட்­டார்.

இத­னி­டையே, ரெம்­டெ­சி­விர் மருந்­தை­யும் உயிர்­வளி உரு­ளை­க­ளை­யும் கள்­ளச் சந்­தை­யில் விற்­போர்­மீது குண்­டர் சட்­டத்­தின்­கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று முதல்­வர் ஸ்டா­லின் எச்­ச­ரித்து இருக்­கி­றார்.