'சந்தனக் கடத்தல் வீரப்பன் புதைத்து வைத்த பணம் இன்னமும் காட்டில் இருக்கு'

1 mins read
a87cb76b-fc14-49dc-9f87-5ec843a4eb59
மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி. கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

சென்னை: அப்பா புதைத்து வைத்­துள்ள பணம் காட்­டில் இருக்கிறது என்று சந்­த­னக் கடத்­தல் வீரப்­ப­னின் மகள் விஜ­ய­லட்­சுமி தெரி­வித்­துள்­ளார்.

ராஜா தயா­ரித்து இயக்கி நடித்­துள்ள 'மாவீ­ரன் பிள்ளை' படம் வாயி­லாக மறைந்த சந்­தன வீரப்­ப­னின் இரண்­டா­வது மகள் விஜ­ய­லட்­சுமி நடி­கை­யாக அறி­மு­க­மா­கி­றார். அந்­தப் படத்­தில் பெண்­க­ளுக்கு தற்­காப்புக் கலை பயிற்­று­விப்­ப­வ­ராக அவர் நடித்­துள்­ளார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தாம் நடிக்­கும் படம் பற்றி பேசிய விஜ­ய­லட்­சுமி, "அப்­பா­வின் கதைக்­கும் 'மாவீ­ரன் பிள்ளை' படத்­திற்­கும் எந்த சம்­பந்­த­மும் இல்லை. அவ­ரது படம் வர வேண்­டும் என்று நினைத்­தேன். அத­னால் அவ­ரது 'கெட்­டப்'பில் உள்ள என் படம் சுவ­ரொட்­டி­யில் வெளி வந்­தது. அப்­பா­வின் கதை­யைப் பட­மாக்க முடிந்­தால் நிச்­ச­யம் செய்­வேன். இதற்­காக, அம்­மா­வி­டம் உரிய அனு­ம­தி­யும் பெறு­வேன். அப்­பா­வின் உண்­மை­யான கதை, இன்­னும் பட­மாக்­கப்­படவில்லை. நாளி­தழ்­களில் வந்த செய்­தியை வைத்­து­தான் வீரப்­ப­னின் வாழ்க்கை கதையை படம் எடுத்­துள்­ள­னர். அப்பா புதைத்து வைத்த பணம் காட்­டில் இருக்­கிறது. ஆனால், இப்­போது அது செல்­லாது. எங்கு இருக்­கிறது என்­றும் யாருக்­கும் தெரி­யாது. அது, அப்­பா­வுக்­கும் அவ­ரு­டன் இருந்த கோவிந்­த­னுக்­கும் மட்­டுமே தெரி­யும்," என்று தெரி­வித்­தார்.