மீண்டும் தேர்தல் களம் காணும் 'தங்க மகன்'

மீண்டும் தேர்தல் களம் காணும் 'தங்க மகன்'

1 mins read
8277038e-3e75-4e2e-a398-7f5e02d82d2d
தினமும் காலை, மாலையில் கிராமம் கிராமமாகச் சென்று இவர் வாக்கு சேகரித்து வருகிறார். படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

தென்காசி மாவட்டம், ஆலங்குளத் தொகுதியில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுடன் மோது கிறார் ஹரி நாடார் என்ற வேட்பாளர்.

"கடந்த முறை நான் போட்டியிட்ட நாங்குநேரி தொகுதியைக் காட்டி லும் இந்த ஆலங்குளம் தொகுதி மக்களுக்கு என்னை மிகவும் பிடித்துப்போய்விட்டது.

"அதனால், என்னைக் காண தினமும் நிறைய பேர் குவிகின்றனர். அவர்கள் என்னை ஏமாற்றமாட்டார் கள். இந்த தேர்தலில் இந்த தங்க மகனுக்கு வெற்றி நிச்சயம்," என்கி றார் ஹரி நாடார்.

ஆலங்குளம் தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு இடையே நேரடி பலப்பரிட்சை கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வாக்குகளைக் குறிவைத்து 'பனங்காட்டு படை' என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் களம் இறங்கியுள்ளார்.

சென்னையில் வசிக்கும் இவர், பிரசாரத்திற்காக ஆலங்குளத்தில் வீடு எடுத்துத் தங்கியுள்ளார்.

தினமும் காலை, மாலையில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்