கீழ வைப்பாறு கடற்கரையில் ஒதுங்கிய ஃபைபர் படகால் பரபரப்பு

கீழ வைப்பாறு கடற்கரையில் ஒதுங்கிய ஃபைபர் படகால் பரபரப்பு

1 mins read
Google News Preferred Icon

கோவில்பட்டி: கீழ வைப்பாறு கடற்கரையில் நேற்று முன்தினம் ஃபைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலோரக் காவல் துறையினரும் கடற்கரையோரம் மற்றும் கடற்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். படகை முதன்முதலில் கண்ட மீனவர்கள் உடனடியாக வேம்பார் கடலோரக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த பைபர் படகைக் கைப்பற்றி சோதனையிட்டனர். அந்தப் படகு தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பள உரிமையாளருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. அவருக்கு வேப்பலோடை பகுதியில் உப்பளங்கள் உள்ளன. அங்கு, கட்டி வைக்கப்பட்டிருந்த ஃபைபர் படகு காற்றின் வேகத்தில் கயிறு அறுந்து கரை ஒதுங்கியது தெரியவந்தது.