அத்திவரதர் விழா நடக்கும் காஞ்சிபுரத்தில் 2 பேர் மரணம்

அத்திவரதர் விழா நடக்கும் காஞ்சிபுரத்தில் 2 பேர் மரணம்

1 mins read
Google News Preferred Icon

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழா நடக்கும் வரதராஜபெருமாள் கோயிலுக் குச் செல்ல தன் வாகனத்தை போலிஸ் அனுமதிக்காததால் 48 வயது வேன் ஓட்டுநர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு மாண்டுவிட்டார். கோயில் தெய்வத்தை படம் எடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 21 வயது ஆடவரை பெண் போலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதால் அவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் இவற்றை போலிஸ் மறுத்தது.

சொந்த பிரச்சினை காரண மாக அந்த ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் ஆந்திரா இளையர் மாடிப்படியில் விழுந்து காயம் அடைந்து இறந்த தாகவும் போலிஸ் கூறியது.