ஓட்டுநரில்லா டாக்சியில் ஸ்டாலின் பயணம்

ஓட்டுநரில்லா டாக்சியில் ஸ்டாலின் பயணம்

1 mins read
75f05aa0-fead-43c0-aff2-c4213d828644
சான் ஃபிரான்சிஸ்கோவில் ஓட்டுநரில்லா டாக்சியில் பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின். - படம்: எக்ஸ் தளம்
Google News Preferred Icon

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநரில்லா டாக்சியில் பயணம் செய்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

கூகல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட் சார்பில் உருவாக்கப்பட்ட ‘வேமோ ரோபோ’ (Waymo robo) டாக்சி சேவை, கடந்த ஜூன் மாதம் சான் ஃபிரான்சிஸ்கோவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் இந்த ஜாகுவார் டாக்சி, சான் ஃபிரான்சிஸ்கோ மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள திரு ஸ்டாலின், பயணத்தின் முதற்கட்டமாக சான் ஃபிரான்சிஸ்கோவில் இந்த ஓட்டுநரில்லா டாக்சியில் பயணம் செய்துள்ளார்.

அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், திங்கட்கிழமை (செப்டம்பர் 2) சிகாகோ செல்கிறார்.

அங்குப் பல்வேறு தொழில் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு செய்யும்படி திரு ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் என்று கூறப்பட்டது.

பல்வேறு தொழிற்சாலைகளை அவர் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி சிகாகோவாழ் தமிழர்களை அவர் சந்திப்பார். பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார்.

குறிப்புச் சொற்கள்
மு.க.ஸ்டாலின்அமெரிக்காடாக்சிமுதலீடு