விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு சிறப்பு அதிகாரிப் பதவி: வெடித்தது சர்ச்சை

விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு சிறப்பு அதிகாரிப் பதவி: வெடித்தது சர்ச்சை

1 mins read
71e22aee-8b87-43d3-bbd3-4404f97b775f
ஜோதிடர் ராதன் பண்​டிட். - படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: முதல்​வர் விஜய்​யின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்​டிட், விஜய்யின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதி​காரி​யாக நியமிக்கப்பட்டதால் எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜோதிடர் ராதன் பண்​டிட், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று முன்பே கணித்திருந்தார்.

இதையடுத்து, அவரைப் பற்றிய பதிவுகள் சமூக ஊடகங்கள் மூலம் பரவலாகப் பகிரப்பட்டன. இவர் ஒருகாலத்தில் மறைந்த முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் ஆன்​மிக ஆலோ​சக​ராக​வும் அறியப்​பட்டவர்.

இந்நிலையில், ராதன் பண்​டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு பேரெதிர்ப்பு கிளம்பியது.

தனிப்பட்ட வகையில் நெருக்கமாக உள்ள ஒருவரை அரசுப் பதவியில் நியமிப்பது சரியல்ல என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

“அறிவியல் பாதையில் செல்ல வேண்டிய மக்களை மூடநம்பிக்கைகளின் பக்கம் திசைதிருப்புவது சரியல்ல,” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ வன்னியரசு கண்டனம் தெரிவித்தார்.

புதன்கிழமை (மே 13) சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகப் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட மேலும் பலர், ஜோதிடர் ராதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதையடுத்து, அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்