தனித்துப் போட்டி: விஜய் திட்டவட்டம்

தனித்துப் போட்டி: விஜய் திட்டவட்டம்

1 mins read
e233645c-e33d-4220-acd8-fd1371385eb2
விஜய். - படம்: நியூஸ் 18
Google News Preferred Icon

சென்னை: விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்துப் போட்டியிடும் எனத் தெரிய வந்துள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளுடன் திங்கட்கிழமை (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார் விஜய்.

அப்போது, தனது தேர்தல் பிரசாரப் பயணம் குறித்து அவர் கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 24 நாள்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்துத்தான் போட்டியிடும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, வேட்பாளர்களும் நிர்வாகிகளும் தொகுதிகளுக்குச் சென்று நேரடியாகக் களப்பணியாற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், தமிழகம் முழுவதும் தாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார்.

தேர்தலில் தவெக வெற்றி பெறுவது உறுதி என்றும் அனைவரும் நம்பிக்கையுடன் களப்பணியாற்ற வேண்டும் என்றும் விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், தாம் போட்டியிடும் முதல் தேர்தலில் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
விஜய்தவெகரஜினிதேர்தல்பிரசாரம்