பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களுக்கு தனி இணையத்தளம்: அரசுக்கு விஜய் கோரிக்கை

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களுக்கு தனி இணையத்தளம்: அரசுக்கு விஜய் கோரிக்கை

1 mins read
4b0c4e36-8ec0-4977-b89c-365b2040dc1f
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: “பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு அனைத்துலகத் தினத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிவருமான விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “அனைத்துலக அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பைவிட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பற்றி பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரமளிக்கின்றன.

“பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்திருந்தார்.

“பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.

“இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு அனைத்துலகத் தினத்தில் வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்