மோடி: தமிழ்நாடு-குஜராத் பிணைப்பைக் கொண்டாடும் சௌராஷ்டிரா- தமிழ் சங்கமம்

மோடி: தமிழ்நாடு-குஜராத் பிணைப்பைக் கொண்டாடும் சௌராஷ்டிரா- தமிழ் சங்கமம்

1 mins read
5fa7483b-8a4e-4bf8-8857-a0d611542152
மதுரை மீனாட்சியம்மன் கோவில். படம்: ஊடகம் -
multi-img1 of 2
Google News Preferred Icon

மதுரை: 'ஒரே இந்தியா, மேன்மையான இந்தியா' திட்டத்தின்கீழ் வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதிவரை குஜராத்தில் சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் கொண்டாடப்படவுள்ளது.

குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான பழம்பெரும் பிணைப்பு முக்கிய அம்சமாக விளங்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

"பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே குஜராத்தைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டை தங்களது இல்லமாக்கிக்கொண்டு, தமிழ்க் கலாசாரத்தைத் தழுவினர். தமிழ் மக்களும் அவர்களைத் திறந்த மனத்துடன் வரவேற்றனர்," என்று திரு மோடி டுவிட்டர் வழியாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பத்து நாள் விழாவில் 3,000 முதல் 5,000 பேர்வரை கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, 1024ஆம் ஆண்டு கஜினி முகம்மது படையெடுத்தபோது குஜராத்தின் சோம்நாத் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் தப்பியோடினர்.

அவர்களில் நெசவைத் தொழிலாகக் கொண்ட சௌராஷ்டிர மக்கள் மதுரைக்குச் சென்றனர்.

தமிழ்நாட்டில் 12 லட்சம் சௌராஷ்டிர மக்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுரையில் உள்ளதாகவும் எஞ்சியோர் சென்னை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது.