மக்கள் புகாரளிக்க மனுக்கள் பெட்டி

மக்கள் புகாரளிக்க மனுக்கள் பெட்டி

1 mins read
3ddd2764-8e55-4fd8-b20a-e5d95b8cfe6b
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் வரவேற்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை செலுத்தலாம். - படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் நடப்புக்கு வந்ததையடுத்து, தமிழ்நாட்டில் பொது மக்கள் புகார்கள் குறித்த மனுக்களை அளிப்பதற்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

2026ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.

கரூரில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு சோதனைப் பணிகளை  மேற்கொண்டு வருகின்றன. பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கரூரில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. - படம்: தமிழ் இந்து

அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் இருந்த சுவரொட்டிகள், விளம்பரங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தபால் மூலமாகமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிலும் வழங்கலாம்.

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் வரவேற்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டியில் மக்கள் மனுக்களை செலுத்தலாம்.

இந்தப் பெட்டியில் பெறப்படும் மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்