மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளைக் கற்றுத்தரும் திட்டம் தொடக்கம்

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளைக் கற்றுத்தரும் திட்டம் தொடக்கம்

1 mins read
c35868d0-9d57-4ed9-adbc-1fc63ecd81ce
மேயர் முன்னிலையில், மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் சாகசங்கள் புரிந்தனர். - படம்: ஊடகம்
multi-img1 of 2
Google News Preferred Icon

சென்னை: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளைக் கற்றுத்தரும் திட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் கராத்தே, டேக்வாண்டோ ஆகிய கலைகள் கற்றுத்தரப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

புதன்கிழமை அன்று இப்பயிற்சியை தொடங்கி வைத்த அவர், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில், ஜூடோ, கராத்தே, சதுரங்கம், கேரம் தடகள விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

“ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகளைத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் இரண்டு நாள்கள் 75 நிமிடங்கள் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் உரிய பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பயிற்சி பெற்ற மாணவிகள் இடையே போட்டிகள் நடத்தப்படும்,” என்று மேயர் பிரியா மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்