விமான நிலையத் திட்டத்தைக் கைவிட விஜய்க்குப் பரந்தூர் மக்கள் கோரிக்கை

விமான நிலையத் திட்டத்தைக் கைவிட விஜய்க்குப் பரந்தூர் மக்கள் கோரிக்கை

1 mins read
b84607e3-2933-4316-a704-c0d5f18be933
கடந்த 1,000 நாள்களுக்கும் மேலாகப் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் பரந்தூர் மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். - கோப்புப் படம்: நியூஸ் 18
Google News Preferred Icon

காஞ்​சிபுரம்: பரந்தூர் விமான நிலை​யத் திட்​டத்​தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனப் போராட்டக் குழு வலியுறுத்தி உள்ளது.

கடந்த 1,000 நாள்களுக்கும் மேலாகப் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் பரந்தூர் மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பரந்தூர் போராட்டக் குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களில் முதல்வர் ஜோசப் விஜய்யும் ஒருவர்.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அவரது தலைமையிலான தவெக வெற்றி பெற்றிருப்பது இந்த விவகாரத்தில் பெரும் திருப்​பு​முனையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தங்களுடைய விளைநிலங்கள், வீடுகள் கைவிட்டுப்போகுமோ என்ற அச்சத்தில் இருந்த பரந்தூர் மக்களுக்குத் தேர்தல் முடிவுகள் நிம்மதி அளித்திருந்தாலும் விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் அறிவிப்பை விஜய் அரசு வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ராகி உள்​ள​தால், இத்​திட்​டத்தை எளி​தாக ரத்துசெய்ய முடி​யும் என்று போராட்​டக் குழு ஒருங்​கிணைப்​பாளர் ஆர்​.எல்​. இளங்கோ தெரிவித்துள்ளார்.

“விவ​சா​யிகளுக்குப் பாதிப்​பு ஏற்படாத வகையில் வேறு மாற்று இடங்​களில் இந்​தத் திட்​டத்தை அமல்​படுத்த நடவடிக்கை எடுக்​கலாம். பரந்​தூர் பகு​தி​யில் விமான நிலை​யம் அமைந்​தால், இங்கு நீர்​நிலைகளில் தேங்கவேண்​டிய உபரிநீர் அனைத்​தும் சென்​னைக்​குள்​தான் செல்​லும்,” என்று இளங்கோ எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்