விஜய், ப.சிதம்பரம் சந்திப்பு: காங்கிரஸ் போடும் புதுக் கணக்கு

விஜய், ப.சிதம்பரம் சந்திப்பு: காங்கிரஸ் போடும் புதுக் கணக்கு

2 mins read
7b093fa1-6e1a-4d11-9bbd-9824b78f7778
முதல்​வர் விஜய்யை ப. சிதம்​பரம் சந்​தித்​துப் பேசியது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: தமிழக முதல்வர் விஜய்யை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்​தில் தற்போது காலி​யாக உள்ள ஒரேயோர் மாநிலங்​களவை இடத்தை காங்​கிரசுக்கு ஒதுக்க வேண்​டும் என திரு விஜய்​யிடம் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர், தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினர். ஆனால், அதை மீறி திமுகவுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ்.

இதற்கு திமுக தரப்புடன் ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவார்த்தையே முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டது. எனினும், தேர்தல் முடிந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறி தவெக தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரசும் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்​தச் சூழ்​நிலை​யில், ப.சிதம்​பரம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) தமிழக அரசின் தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யைச் சந்​தித்​துப் பேசியது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏறக்குறைய அரை மணிநேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, மாநிலத்​தின் நிர்​வாக ரீதியி​லான பல்​வேறு திட்​டங்​கள் குறித்​தும் தற்​போதைய அரசி​யல் நில​வரங்​கள் குறித்​தும் இரு​வரும் விரி​வாகக் கருத்​துப் பரி​மாற்​றம் செய்​து​கொண்​ட​தாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

மாநிலங்​களவை இடங்​களுக்​கான வேட்​புமனுத் தாக்​கல் ஏற்​கெனவே தொடங்​கி​விட்ட நிலை​யில், தவெக சார்​பில் இன்​னும் வேட்​பாளர் அறிவிக்​கப்​ப​டாத​தால், இந்​தச் சந்​திப்பு அந்த இடத்​துக்​கான பேச்​சு​வார்த்​தை​யாகவே இருக்​கலாம் எனவும் கருதப்படுகிறது.

இதனிடையே, மாநிலங்களவை இடம் குறித்து முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

மூத்த தலைவர் ப.சிதம்பரமும் முதல்வர் விஜய்யும் நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்