நாடு தழுவிய அரசியல் பிரசாரம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

நாடு தழுவிய அரசியல் பிரசாரம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

1 mins read
9f857be0-9b5a-4da5-a0e1-fd9ae19e7ee3
டி. ராஜா. - கோப்புப் படம்: ஃப்ரன்ட்லைன்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு, ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அரசியல் விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் இந்தப் பிரசாரம் நடைபெறும் என்றும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, கூட்டாட்சி, கல்வி, தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி கிராமங்கள், நகரங்களில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் திரு டி.ராஜா கூறினார்.

இந்தியா தற்போது சவாலான, கவலைக்குரிய சூழலை எதிர்கொண்டுள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

பொருளியல், அரசியல், சமூக, கலாசார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளில் நாடு தற்போது சிக்கியுள்ளதாக திரு டி. ராஜா கவலை தெரிவித்தார்.

அரசியலமைப்பு, ஜனநாயகத்தைக் காப்பதற்காக மக்களைச் சென்றடைவதும் ஊக்கப்படுத்துவதும் அவசியம் என்று குறிப்பிட்ட அவர், எதிர்வரும் ஆகஸ்ட் 6 முதல் 15ஆம் தேதி வரை நாடு தழுவிய அரசியல் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றார்.

குறிப்புச் சொற்கள்