செல்லப் பிராணிகள், தெருநாய்களுக்கு நுண்சில்லு பொருத்த மாநகராட்சி முடிவு

செல்லப் பிராணிகள், தெருநாய்களுக்கு நுண்சில்லு பொருத்த மாநகராட்சி முடிவு

1 mins read
e326b6f6-1043-4acd-84b6-ac5ef1f27b32
அனைத்து வகை நாய்களைப் பற்றிய விவரங்களை இணையத்தளத்தில் பதிவு செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. - கோப்புப் படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: மாநக​ராட்சி சார்​பில், செல்​லப் பிராணி​கள், சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு நுண்சில்லு (மைக்ரோசிப்) பொருத்​தும் பணிகளை மேலாண்மை செய்ய திறன்பேசி செயலியை உரு​வாக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

இதையடுத்து, அனைத்து வகை நாய்களைப் பற்றிய விவரங்களை இணையத்தளத்தில் பதிவு செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

இதன் மூலம் ஏறக்குறைய 200,000 நாய்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும். மேலும், நாய்​களைப் பிடித்​தல், தடுப்​பூசி போடுதல், கண்​காணித்​தல் போன்ற பணி​களை மேலாண்மை செய்ய தனித் திறன்பேசிச் செயலியை​யும் உரு​வாக்க மாநக​ராட்சி திட்டமிட்டுள்ளது. அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ‘நுண்சில்லு’ நாய்களின் உடலில் பொருத்தப்படும்.

“நுண்சில்லு பொருத்​தவும் இந்தச் செயலியை உரு​வாக்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இது விரை​வில் பயன்​பாட்​டுக்கு வரும். இந்தச் செயலி வழி​யாக செல்​லப் பிராணி​களுக்கு எப்​போது ‘ரேபிஸ்’ தடுப்​பூசி போட வேண்​டும் என்ற நினைவூட்டல், அவற்றின் உரிமையாளர்களுக்கு திறன்பேசி மூலம் குறுந்தகவலாகத் தெரிவிக்கப்படும்,” என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்