விஜய்யை வீழ்த்த ஒன்றிணைந்த வாழ்நாள் எதிரிகள்: மாணிக்கம் தாகூர்

விஜய்யை வீழ்த்த ஒன்றிணைந்த வாழ்நாள் எதிரிகள்: மாணிக்கம் தாகூர்

1 mins read
34f1e476-aa1b-4786-9593-c18da0537bd6
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர். - கோப்புப்படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை வீழ்த்துவதற்காக வாழ்நாள் எதிரிகளான இரண்டு திராவிடக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் தமது எக்ஸ் பக்கத்தில், “இரண்டு திராவிடக் கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காகவா இல்லை. மதச்சார்பின்மைக்காகவா இல்லை.

ஒரே ஒரு மனிதனை, அதாவது விஜய்யை வீழ்த்த நடக்கும் முயற்சியை காங்கிரஸ் தெளிவாகப் பார்த்தது, வெளியேறியது. ஆர்எஸ்எஸ், பாஜகவின் பி-டீமுடன் சேர்ந்து கொண்ட உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.

‘நிலையான அரசு’ என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? யார் துரோகி?” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6ஆம் தேதி வழங்கினர்.

இது திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தங்கள் முதுகில் குத்திவிட்டதாக திமுகவினர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்