திமுகவுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பிரசாரம்

திமுகவுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பிரசாரம்

1 mins read
25f2a5a1-60a8-4c8f-aa5c-ee4501a0190f
ஸ்டாலினுடன் கெஜ்ரிவால். - கோப்புப்படம்: மாலை மலர்
Google News Preferred Icon

சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அவர் ஏப்ரல் 20ஆம் தேதி தமிழகம் வருவார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய அளவில் முக்கியமான எதிர்க் கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இடம்பெற்றிருந்தது. எனினும், பின்னர் அக்கட்சி கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்தது.

இந்நிலையில், இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுக்கு ஆதரவாக முன்னாள் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வர்.

சென்னை, அதன் அண்டை மாவட்டங்களில் ஏப்ரல் 20, 21ஆம் தேதிகளில் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்