தமிழக கிராமியக் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு

தமிழக கிராமியக் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு

1 mins read
744b11a6-4fe4-42cb-8525-cc8af5467450
‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி. - கோப்புப் படம்: patrikai.com / இணையம்
Google News Preferred Icon

சென்னை: சங்கமம் கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை ரூ. 5000ஆக உயர்த்தி வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி கடந்த மூவாண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. இவ்வாண்டுக்கான அந்நிகழ்ச்சியை திரு ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 18 இடங்களில் 4 நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தினமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் 75 கலைக் குழுக்களாகப் பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை வழங்குகின்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் வசதி, உணவு, இரு உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தையும் தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அதோடு அவர்களுக்கு வழங்கப்பட்டும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000ஆக உயர்த்த திரு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்