காஞ்சிபுரத்திலிருந்து அமெரிக்கா செல்லும் தங்கத் தேர்

1 mins read
4898ab74-1c44-4db6-a0b2-c3ad452c01af
காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட, நான்கு டன் எடையுடன் கூடிய, தங்க முலாம் பூசப்பட்ட தேர் அமெரிக்காவின் சியாட்டல் நகரில் கட்டப்படும் கோயிலுக்குச் செல்கிறது. - படம்: ஊடகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 4 டன் எடை கொண்ட தேர் நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு, சியாட்டல் நகரில் வேதா என்ற கோயில் கட்டப்பட்டு வருகிறது.

அந்தக் கோயிலுக்காக காஞ்சிபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தேர் தயாரிக்கப்பட்டது. 23 அடி உயரத்தில் 4 டன் எடையில் இரும்பையும் தாமிரத்தையும் பயன்படுத்தி, தங்க முலாம் பூசப்பட்ட தேரை காஞ்சிபுரத்திலுள்ள ராஜா ஆன்மிக நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தத் தேர் 75 நாள்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேரை 35 டிகிரி அளவுக்குத் திருப்பும் வகையில் தொழில்நுட்பம் உள்ளது. அதனை, வேறு இடங்களுக்கு எளிதில் கொண்டுசெல்லும் வகையில் ஆறு பாகங்களாகப் பிரிக்க முடியும். சிவபெருமான், மகாவிஷ்ணு என எந்தக் கடவுளுக்கும் பயன்படுத்தும் வகையில் சிலைகளைப் பொருத்திக் கொள்ளலாம்.

இதன் மதிப்பு ரூ.1.25 கோடி. இந்தத் தேர் ஆறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) விமானம் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது.

குறிப்புச் சொற்கள்