சென்னை: ராமதாசும் அன்புமணியும் இணைந்து செயல்படுவதாக முடிவெடுத்தால் பாமகவை விட்டு வெளியேற தாம் தயார் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியில் இருந்த மூத்தவர்களுக்கு அன்புமணி கடுமையாக அவமரியாதை செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
துரோகி என அன்புமணி கருதும் அனைவருமே கட்சியில் இருந்து விலகத் தயார் என்றும் ஜிகே மணி கும்பிட்டார்.
பாமக தலைவர் ராமதாசைக் கொல்லுங்கள் என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை அழைத்து அன்புமணி பாராட்டினார். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியைகூட கடுமையாக விமர்சித்தார் அன்புமணி.
கட்சியை விட்டு விலகுவதுடன், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றார் ஜிகே மணி.

