எரிவாயுத் தட்டுப்பாடு; விறகடுப்புக்குத் திரும்பும் உணவகங்கள்

எரிவாயுத் தட்டுப்பாடு; விறகடுப்புக்குத் திரும்பும் உணவகங்கள்

2 mins read
2c0bf88f-d829-45b6-83d3-9380607e0598
சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டால் உணவகங்கள் பல விறகடுப்புக்கு மாறி வருகின்றன. அதையடுத்து விறகு விற்பனை சூடுபிடித்துள்ளது. - கோப்புப்படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: மத்​தி​ய கிழக்​கில் போர்ப் பதற்​றம் நீடிக்​கிறது. இதனால் ஈரானின் கடல்​வழி போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டு இந்​தி​யா​வில் சமையல் எரிவாயு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. அதையடுத்து, பல உணவகங்கள் விறகு, கரி அடுப்புகளுக்கு மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்​டர் தடையின்றி விநியோகிக்கப்படுகிறது. ஆனால், வணி​கப் பயன்​பாட்டுக்கான எரிவாயு விநியோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

மருத்​து​வ​மனை, கல்வி நிறு​வனங்​களுக்கு மட்​டும் முன்​னுரிமை அடிப்​படை​யில் எரிவாயு வழங்​கப்​படு​கிறது.

வணி​கப் பயன்​பாட்​டுக்​கான எரிவாயு நிறுத்​தப்​பட்​ட​தால், பெரும்​பாலான இடங்​களில் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன.

உணவகங்கள் பல விறகு மற்றும் கரி அடுப்புகளுக்கு மாறி வருகின்றன. சமையல் எரிவாயுத் தட்​டுப்​பாட்​டால் உணவகங்​கள், தேநீர்க் கடைகள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. பல இடங்​களில் தேநீர், சிற்​றுண்டி விலைகள் அதி​கரித்​துள்​ளன.

தேநீர்க் கடை உரிமை​யாளர்​கள் மற்​றும் உணவக சங்​கங்​கள் ஒருங்​கிணைந்​து, உணவுப் பொருட்​கள் விலையை உயர்த்த எந்த கூட்​டுத் தீர்​மான​மும் எடுக்​க​வில்​லை. இருப்பினும், எரிவாயு விலையைத் தாக்குப்பிடிக்கும் வகையில் உணவக உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் உணவுகளின் விலையை ஏற்றியுள்ளனர். இதற்கு வணி​கப் பயன்​பாட்​டுக்​கான எரிவாயுவை கள்​ளச்​சந்​தை​யில் ரூ.3 ஆயிரத்​திலிருந்து ரூ.6,500 வரை கொடுத்​து வாங்​குவதே நிலையே இதற்கு முக்​கியக் காரணம் ஆகும். இது சிறிய கடைகளின் உரிமை​யாளர்​களுக்கு பெரும் சுமை​யாக மாறி​யுள்​ளது.

விறகு விலை ஏற்றம்

பல்வேறு ஹோட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகளில் எரிவாயு பயன்படுத்தி சமையல் செய்வதற்குப் பதிலாக விறகு அடுப்பில் சமையல் செய்து வருகின்றனா். இதனால் விறகு விற்பனை சூடுபிடித்து உள்ளது.

ஒரு டன் ரூ.2,500க்கு விற்பனை செய்யப்பட்ட விறகு, தற்போது ரூ.4,000க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் வரை ஒரு கிலோ விறகு ரூ.10 முதல் 12 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விறகிற்கு தேவை அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.16 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனினும், உணவக உரிமையாளர்கள் இதனை வாங்கியே தற்போது சமையல் செய்கின்றனர். அதேபோல், பெரும்பாலான வீடுகளிலும் பொதுமக்கள் விறகு அடுப்புகளுக்கு மாறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்