வி.சி.க.வைத் தொடர்ந்து த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கியது முஸ்லிம் லீக்

வி.சி.க.வைத் தொடர்ந்து த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கியது முஸ்லிம் லீக்

1 mins read
f49eed49-adec-40bc-9da7-5663574fe3f4
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் செங்கோட்டையன், அருண்குமார் உள்ளிட்டோரிடம் இந்தியன் யுனைடட் முஸ்லிம் லீக் கட்சி தனது ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஆதரவளிப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. அதே சமயம், முஸ்லிம் லீக் கட்சி தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்வதாகவும் த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும் அறிவித்தது.

தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவு கடிதத்தை த.வெ.க. நிர்வாகிகள் செங்கோட்டையன், அருண்குமார் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். இதன் மூலம் த.வெ.க.வின் ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்