குஷ்பு பறந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

குஷ்பு பறந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

1 mins read
eebbd721-765d-43a0-a6ff-b1c31d52d123
குஷ்புவின் பையைச் சோதித்த காவல்துறையினர். - படம்: மாலைமலர்
Google News Preferred Icon

ஊட்டி: பாஜக மாநில துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு சென்ற ஹெலிகாப்டரைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) சோதனை செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், உதகையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜ ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் குஷ்பு பயணம் மேற்கொண்டார்.

இதனிடையே, உதகையில் குஷ்பு பயணம் செய்த ஹெலிகாப்டர் தரையிறங்கியவுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனைக்குப் பின்னர், கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு பிரசாரம் நடைபெறும் இடத்துக்கு குஷ்பு சென்றார்.

கடந்த வாரம் உதகையில் பிரசாரம் மேற்கொள்வதற்காகச் சென்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

குறிப்புச் சொற்கள்