குவியும் வெளிநாட்டுப் பறவைகள்; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குவியும் வெளிநாட்டுப் பறவைகள்; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

1 mins read
756878f6-1228-43ae-acd9-afc68eb75ff3
ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் வெண்ணிற மலர்கள் போலப் பரவி நிற்கும் வெள்ளை நாரைகள். - படம்: மாலை மலர்
Google News Preferred Icon

ஊட்டி: தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.

ஊட்டியின் மிகமுக்கியமான இடமாக உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் தற்போது வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் முகாமிட்டு வருகின்றன.

வெளிநாட்டுப் பறவைகளின் வருகையால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் போலவே உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் வெண்ணிற மலர்கள் போலக் காட்சியளிக்கும் வெள்ளை நாரைகள், அடர்ந்த சிவப்பு நிற கால்களுடன் உலா வருகின்றன. இது பார்வையாளர்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து வரும் அந்த நாரைகள் அனைத்தும் வெள்ளை நிற இனத்தைச் சேர்ந்தவையே.

ஆண்டுதோறும் கோடைக் காலத் தொடக்கத்தில் ஊட்டிக்கு வரும் அந்த நாரைகள், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வரை அங்குத் தங்கியிருக்கும்.

குறிப்புச் சொற்கள்