20 தொகுதிகள் கேட்கும் தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் கிடைக்கலாம்

20 தொகுதிகள் கேட்கும் தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் கிடைக்கலாம்

1 mins read
6b597b8b-841b-45c1-87f3-acb700838a75
திமுக தலைமையிடம் 20 தொகுதிகளை பட்டியலிட்டு தேமுதிக, வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: தினத்தந்தி

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இருப்பினும் கூட்டணியை மேலும் வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாரும் எதிர்பாராத வகையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.

அண்மையில் திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக, தனது 20 தொகுதிகளை பட்டியலிட்டு தேமுதிக, திமுக தலைமையிடம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 தொகுதிகளும், 1 ராஜ்ய சபா சீட்டும் வழங்க உறுதியளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு, அக்கட்சியின் பொருளாளரும், பிரேமலதா விஜயகாந்தின் சகோதரருமான எல்.கே.சுதீஷ் தேர்வு செய்யப்படுவார் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.

தேமுதிக தலைமையும் வேட்பாளர்களைத் தயாராகவே வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்தும், சிவகாசி, விருதுநகர், சாத்தூர் ஆகிய மூன்று தொகுதிகளில் ஒன்றில் விஜய பிரபாகரனும், விருகம்பாக்கத்தில் பார்த்தசாரதியும், விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி எல்.வெங்கடேசனும், பல்லாவரத்தில் அனகை டி.முருகேசனும், பாப்பிரெட்டிப்பட்டியில் ஆர்.இளங்கோவனும், சேலம் தெற்கில் அழகாபுரம் மோகன்ராஜூம் களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்