திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக

2 mins read
6669f170-6179-4039-9dc8-3ab20e111b1e
வியாழக்கிழமை (பிப்ரவரி 19) திமுக தலைவரைச் சந்தித்தார் பிரேமலதா. - படம்: தினமணி

சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணியில் இணைந்து போட்டியிடுவதை தேமுதிக முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, தேமுதிகவை கூட்டணிக்கு வரவேற்று முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக-திமுக தலைமையிலான கூட்டணிகளில் பல்வேறு சிறிய, பெரிய கட்சிகள் இணைந்து வருகின்றன. தேமுதிக எந்தக் கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை (பிப்ரவரி 19) திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியானது.

வியாழக்கிழமை திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்துக்கு திடீரென வருகை தந்தார் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

இதையடுத்து, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், பிரேமலதா, தேமுதிக பொருளாளர் சுதீஷ் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் முடிவில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியானது.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் சுதீஷ்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தல் களத்தைச் சந்தித்து வந்த தேமுதிக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

தேமுதிகவை கூட்டணிக்கு வரவேற்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.

தேமுதிக வரவால் திமுக கூட்டணி வலுப்பெற்றுள்ளது என்றும் இரு தரப்புமே இதனால் பயனடையும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

“தங்களது நல்வரவு, நல்லுறவு தொடர்ந்து தமிழகத்தின் உயர்வுக்கு பங்களிக்கட்டும். திராவிட மாடல் ஆட்சி தொடரவும் தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணம் செய்வோம்,” என்று முதல்வர்‌ ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்