தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு எட்டு நாள்கள் விடுமுறை

தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு எட்டு நாள்கள் விடுமுறை

1 mins read
8d8dc079-3e67-40bd-b6e6-5a1812b42e2f
டிசம்பர் 13ஆம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 10ஆம் தேதி மகா தேரோட்டமும், வரும் 13ஆம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஏறத்தாழ 14 ஆயிரம் காவலர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

இதனால், 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர்16ஆம் தேதி வரை எட்டு நாள்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்