300 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய செப்பேடுகள்

300 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய செப்பேடுகள்

2 mins read
c5542f0b-5e66-4035-880b-0cd012768da1
ஆனைமங்கலம் செப்பேடுகள். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

தஞ்சை: நெதர்​லாந்து அரசு ஒப்படைத்த சோழர் காலத்தைச் சேர்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் தாயகம் வந்து சேர்ந்தன. அவற்றை தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்து, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். முரசொலி கடிதம் எழுதியுள்ளார்.

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், இது தொடர்பாக மத்திய கலாசார, சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தச் செப்பேடுகள் சோழப் பேரரசின் கடற்படை வலிமை, கடல்வழி வர்த்தகம், தென்கிழக்கு ஆசியாவுடனான தூதரகத் தொடர்புகள் குறித்த முக்கியமான சான்றுகளை வழங்குவதாக திரு முரசொலி குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு காலத்தில் தென்னிந்தியா, இலங்கையின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தியதோடு, தென்கிழக்கு ஆசியா முழுவதும் வலிமையான கடற்படைப் பயணங்களையும் மேற்கொண்ட சோழப் பேரரசின் பொற்காலம் குறித்த அரிய முதன்மைச் சான்றுகளை இச்செப்பேடுகள் அளிக்கின்றன,” என்று திரு முரசொலி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஆனைமங்கலம் செப்பேடுகளை பொதுமக்கள் பார்வைக்காக தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் வைப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, செப்பேடுகளை கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் பொது​மக்​கள் பார்​வைக்கு நிரந்​தரமாகக் காட்​சிப்​படுத்த வேண்​டும் என கங்​கை​கொண்ட சோழபுரம் மேம்​பாட்​டுக்​குழுத் தலை​வர் ஆர்​.கோமகன் வலியுறுத்தியுள்ளார்.

ஆயிரம் ஆண்​டு​களுக்கு முந்​தைய தமிழனின் கொடைத்​திறன், மதநல்​லிணக்​கம், நிர்​வாக நேர்​மை, அனைத்துலகப் பார்வை ஆகிய​வற்றை எடுத்துக்கூறும் அரிய பொக்கிஷமாக இந்தச் செப்பேடுகள் விளங்குகின்றன.

எனவே, அவை பொதுமக்களுக்குக் காட்​சிப்​படுத்​தப்பட வேண்டும் எனக் கோமல் குறிப்பிட்டுள்ளார்.

இந்​தச் செப்​பேடு​களை வெறும் நிர்​வாக ஆவணங்​களாகக் கருத​வில்​லை என்றும் மத்​தி​ய​கால தென்​னிந்​தி​யா​வில் தமிழ்​நாட்​டின் பன்​முகப் பண்​பாடு, வணி​கத் தொடர்​பு​கள் நிறைந்த உலகின் முக்​கியத் தடயங்​களாக திகழ்​கின்றன என்றும் மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்