விஜய் படங்களை ஒளிபரப்பத் தடை கோரிய காங்கிரஸ்

விஜய் படங்களை ஒளிபரப்பத் தடை கோரிய காங்கிரஸ்

1 mins read
fcca76a6-2677-43f8-8f64-0e0136037199
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய். - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

மதுரை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் திரைப்படங்களைத் தனியார், அரசுத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் எனப் புதிய கோரிக்கை எழுந்துள்ளது.

அரசியல் புதுவரவான விஜய் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மார்ச் 25ஆம் தேதியன்று காங்கிரஸ் மதுரை தெற்​குத்தொகுதி பொறுப்​பாளர் செய்​யது பாபு தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தார்.

அதில், “விஜய் தற்போது ஓர் அரசியல் கட்சியின் தலைவராகப் போட்டியிடுகிறார். தொலைக்காட்சிகளில் அவரது பழைய திரைப்படங்களைத் தொடர்ந்து ஒளிபரப்புவது, மறைமுகமாக அவருக்குத் தேர்தல் பிரசாரம் செய்வது போல அமையும். இது மற்ற வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் சமமான வாய்ப்பைப் பாதிக்கும்,” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் உள்ளவரை நடிகர் விஜய்யின் பழைய படங்களை ஒளிப்பரப்பத் தடை விதிக்க வேண்​டும் எனத் தனது மனுவில் அவர் தெரிவித்தார்.

இந்த மனு குறித்துத் தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரபூர்வமான முடிவை அறிவிக்கவில்லை.

ஒருவேளை தடை விதிக்கப்பட்டால், தேர்தல் முடியும்வரை (மே 2026 வரை) விஜய் நடித்த படங்கள் எந்தவொரு தமிழ் ஒளிவழியிலும் ஒளிபரப்பப்படாது. இது குறித்த விரிவான வழிகாட்டுதல்களைத் தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
விஜய்திரைப்படம்காங்கிரஸ்தடை