முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் வரவேற்பு

முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் வரவேற்பு

1 mins read
f9a488ef-6f29-4329-9607-db780ff5cec6
தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா, நடிகர் நெப்போலியன் மற்றும் அமெரிக்கத் தமிழர்கள் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: அனைத்துலக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளியல் வளர்ச்சி என்கிற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

அதற்காக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

சான்பிரான்சிஸ்கோ நகர் சென்றடைந்த ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா, நடிகர் நெப்போலியன் மற்றும் அமெரிக்கத் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்
மு.க.ஸ்டாலின்அமெரிக்காவிமான நிலையம்