விஜய் வந்தால் பாஜக வாக்கு வங்கி பாதிக்கப்படும்: அமித்ஷா திடீர் விளக்கம்

விஜய் வந்தால் பாஜக வாக்கு வங்கி பாதிக்கப்படும்: அமித்ஷா திடீர் விளக்கம்

1 mins read
daf85010-4d49-4632-8355-e4738d8cf222
அமித்ஷா. - படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான எந்தவித முயற்சியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொள்ளவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விஜய்யுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது முற்றிலும் பொய்யான தகவல் என்றார்.

விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு வங்கியில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை கவனத்தில் கொண்டிருந்ததாக அமித்ஷா குறிப்பிட்டார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் வரையில், தமிழக வெற்றிக் கழகத்தை எப்படியாவது அதிமுக தலைமையிலான கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாகப் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் அமித்ஷா நேரடியாக மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், அதிமுகவுடனான கூட்டணி மட்டுமே பாஜகவுக்குப் பலம் சேர்க்கிறது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

“கூட்டணிக் கட்சிகள் இடையே சுமுக உறவு நிலவுவது அவசியம். எனவே பாஜக, அதிமுகவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதோடு, சிறிய கட்சிகளையும் இணைத்துச் செயல்பட்டு வருகிறது.

“தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அலை வீசுகிறது. இதனால் வலுவான பெரும்பான்மையுடன் எங்களின் கூட்டணி ஆட்சி அமைக்கும்,” என்று அமித்ஷா அப்பேட்டியில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்