பாஜக-அதிமுக கூட்டணி ஒரு மிரட்டல் அரசியல்: காங்கிரஸ் எம்.பி.

பாஜக-அதிமுக கூட்டணி ஒரு மிரட்டல் அரசியல்: காங்கிரஸ் எம்.பி.

1 mins read
0408956f-7c52-4082-8e2b-bb4ae1d227d0
விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர். - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

சென்னை: பாஜக-அதிமுக கூட்டணி என்பது மற்றொரு சரணடையும் நிகழ்வு என்று காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார்.

பாஜக அமைச்சர் அமித்ஷா, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான அதிமுகவைக் கைப்பற்றுகிறார் என்பது தெளிவாகி விட்டது.

உண்மையிலேயே, இது ஒரு கூட்டணி அரசியல் அல்ல. இது மிரட்டல் அரசியல். மாநிலக் கட்சிகளை ஆர்.எஸ்.எஸ் பொம்மைகளாக மாற்றும் அரசியல் இது.

ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்துக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்த மாநிலமே தமிழ்நாடு. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில் பதில் தருவார்கள் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்த பதிவில் முதலில் மௌனம், பின்னர் இணக்கம், இப்போது முழுமையான சரணடைவு என அதிமுக தலைமை ஆர்.எஸ்.எஸ் இடம் அதிமுக சரணடைந்துள்ளதாக விமர்சித்துப் பதிவிட்டு இருந்தார்.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்பாஜகஅதிமுக