பள்ளிப் பாடத்திட்ட வடிவமைப்புக் குழு நியமனம்

பள்ளிப் பாடத்திட்ட வடிவமைப்புக் குழு நியமனம்

1 mins read
9aa7f0a8-0bd9-42f3-9f0a-787d12ef6222
மயில்சாமி அண்ணாதுரை. - கோப்புப் படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் படிப்படியாக மாற்றி அமைக்கப்பட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

மேலும், புதிய குழுவில் விஞ்ஞானி த.வி. வெங்​கடேஸ்​வரன், சென்னை பல்​கலைக்​கழக இயற்​பியல் துறைப் பேராசிரியை ரீட்டா ஜான், சென்னை மாநிலக் கல்​லூரி முன்​னாள் பேராசிரியர் சுதந்​திர​முத்து உள்​ளிட்ட 14 பேர் உறுப்​பின​ர்களாக இருப்​பர் என்றும் மாநிலக் கல்வி ஆராய்ச்​சி, பயிற்சி நிறுவன இயக்​குநர் அக்​குழு​வின் உறுப்​பினர் - செயல​ராகச் செயல்​படு​வார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்​பினர்​களின் பதவிக் காலம் மூன்று ஆண்​டு​கள் ஆகும்.

தற்​போது 1 முதல் 3ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ள​தால் புதிய குழுவானது 4ஆம் வகுப்பு முதல் புதிய பாடத்திட்​டத்தைத் தயாரித்து அரசிடம் அளிக்கும்.

அக்குழு​ அளிக்கும் பரிந்​துரைகளின் அடிப்​படை​யில் 4ஆம் வகுப்பு முதல்​ 12ஆம் வகுப்பு வரை படிப்​படி​யாக புதி​ய பாடத்​திட்​டம்​ பின்​பற்​றப்​படும்​ எனத் தமிழக அரசு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்