அன்புமணிக்கே மாம்பழச் சின்னம்; ராமதாஸ் மனு தள்ளுபடி

அன்புமணிக்கே மாம்பழச் சின்னம்; ராமதாஸ் மனு தள்ளுபடி

1 mins read
ebab058e-de6a-4b6c-b947-ac2f308c091d
பாமகவின் மாம்பழச் சின்னம் அன்புமணி தரப்புக்கு என்பது உறுதியாகியுள்ளது. - படம்: ஒன் இந்தியா
Google News Preferred Icon

சென்னை: மாம்பழச் சின்னத்தை முடக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) தள்ளுபடி செய்துள்ளது.

பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனா் ச. ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மாா்ச் 26ஆம் தேதி தள்ளுபடி செய்தது. ராமதாஸ் தோ்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் கூறியிருந்தது.

இதுதொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

அங்கு இருநாள்கள் விசாரணை நடைபெற்ற நிலையில், ஏற்கெனவே சின்னம் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு செல்லாது என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அன்புமணி, தேர்தல் ஆணையத்தின் மூலம் கட்சியின், சின்னத்தைப் பெற்ற பிறகே ராமதாஸ் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். பாமகவின் மாம்பழச் சின்னம் அன்புமணி தரப்புக்கு என்பது உறுதியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்