காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டுச் சிறை

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டுச் சிறை

1 mins read
ae13adce-1b7b-4a31-9d7b-863ff7b7c73d
விமல். - கோப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல் தயாரித்து, நடித்த ‘மன்னர் வகையறா’ என்ற படம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தைத் தயாரிக்க கோபி என்பவரிடம் ரூ.4.50 கோடியைக் கடனாகப் பெற்றிருந்தார் விமல்.

இதற்காகக் கடனைத் திருப்பிச் செலுத்த ஏதுவாக காசோலையும் வழங்கியிருந்தார். எனினும், திரு கோபி காசோலையை வங்கியில் செலுத்தியபோது நடிகர் விமலின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது.

இதையடுத்து, அவர் நீதிமன்றத்தை அணுகினார். அந்த வழக்கில் நடிகர் விமல் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஏற்கெனவே முன்னிலையாகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 23) வழக்கின் தீர்ப்பு வெளியானது.

நடிகர் விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, ஓராண்டு சிறைத்தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.

எனினும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விமலுக்கு உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்