வணிக ரீதியான சமையல் எரிவாயு ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை

வணிக ரீதியான சமையல் எரிவாயு ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை

2 mins read
எரிவாயு விநியோகம் சீராக உள்ளது
b457159b-c8db-4b30-a80c-9e4b13b547a7
எரிவாயுக் கலன் பதுக்​கலைத் தடுக்கத் தமிழக அரசு 10,000க்​கும் அதி​க​மான திடீர் அமலாக்கச் சோதனைகளை மேற்​கொண்​டது. - படம்: ஐஏஎன்எஸ்

சென்னை: தமிழ்நாட்டில் வணிக ரீதி​யான சமையல் எரிவாயு (எல்பிஜி) ஒதுக்​கீடு உடனடி​யாக 70 விழுக்காடு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ள​தாக இந்​திய எண்​ணெய் கழகத் தலை​வர் ஏ.எஸ்​. சஹானி தெரி​வித்​துள்ளார்.

தமிழகத்​தில் எரிபொருள் நிலைமை குறித்​து, இந்​திய எண்ணெய் கழகத் தலை​வர் ஏ.எஸ்​. சஹானி சென்​னை​யில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) ஆய்வு செய்​தார்.

“சுத்​தி​கரிப்புத் திறன்​கள் ஏறத்​தாழ முழு அளவில் இருப்​ப​தால் பெட்​ரோல், டீசல், விமானத்​துக்​கான எரிபொருள் உட்பட திரவ எரிபொருள் விநி​யோகத்​தில் சிக்​கல் இல்​லை,” என்று திரு சஹானி செய்தியாளர்களிடம் கூறினார்.

“நாள்​தோறும் ஏறக்குறைய 500,000 எரிவாயுக் கலன்கள் என்ற தமிழகத்​தின் சமையல் எரி​வாயுத் தேவையை 100 விழுக்காடு பூர்த்தி செய்​யும் நிலை​யில் எண்​ணெய் சந்​தைப்​படுத்​தும் நிறு​வனங்​கள் உள்​ளன. வீட்டுப் பயன்பாட்டுச் சமையல் எரி​வா​யுவிற்கு அதி​கபட்ச முன்​னுரிமை அளிக்​கப்​படு​கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

சில பகு​தி​களில் ஆறு முதல் எட்டு நாள்​கள்வரை காத்​திருப்புக் காலம் இருப்​பதைக் குறைப்​ப​தற்கு முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​படு​வதாக திரு சஹானி குறிப்பிட்டார்.

மருத்​து​வ​மனை​கள், கல்வி நிறு​வனங்​கள் போன்ற அத்​தி​யா​வசி​யப் பகு​தி​களுக்கு எந்​த​வித​மான கட்​டுப்​பாடும் இல்​லாமல் 100 விழுக்காட்டுத் தேவை பூர்த்தி செய்​யப்​படு​வதாக அவர் கூறினார்.

“சென்னை மற்​றும் புறநகர்ப் பகு​தி​களில் 20 நாள்​கள்வரை கால​தாமதம் ஏற்படுவது தொடர்​பாக விரி​வானப் பகுப்​பாய்வு நடத்​தப்​பட்​டுள்​ளது. ஒரு சில நாள்களில் அத்​தகைய பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காணப்​படும்,” என்று திரு சஹானி நம்பிக்கை தெரிவித்தார்.

தொடரும் அமலாக்க நடவடிக்கைகள்

இதற்கிடையே, எரிவாயுக் கலன் பதுக்​கலைத் தடுக்கத் தமிழக அரசு 10,000க்​கும் அதிக​மான திடீர் அமலாக்கச் சோதனைகளை மேற்​கொண்​டது.

எண்​ணெய் சந்​தைப்​படுத்​தும் நிறு​வனங்​களும் 1,500க்​கும் அதி​க​மான திடீர் சோதனை​களைத் தமிழகம் முழு​வதும் மேற்​கொண்டன.

மக்​களின் அனைத்துத் தேவை​களை​யும் பூர்த்தி செய்யப் போதிய கச்சா எண்​ணெய் இருப்​பில் உள்​ள​தால், எரிபொருள் வாங்​கு​வது தொடர்​பாக மக்​கள் பீதி​யடைய வேண்​டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்