இந்திய அணிக்கு கோஹ்லி வாழ்த்து

இந்திய அணிக்கு கோஹ்லி வாழ்த்து

1 mins read
9976e16a-c53f-4152-84c5-a87561c1d41b
இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. - கோப்புப்படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ராஞ்சி: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு அதன் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக கோஹ்லி விளையாடவில்லை.

இந்நிலையில், நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 3-1 என்ற முன்னிலையுடன் தொடரை வென்றுவிட்டது.

இதனையடுத்து, “ஆம்!!! எங்களது இளம் அணியின் அற்புதமான தொடர் வெற்றி. அவர்கள் தங்கள் துணிவையும், மனவுறுதியையும், மீள்திறனையும் வெளிப்படுத்தினர்,” என்று கோஹ்லி தமது எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்ததாக, கடைசி, ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்கவுள்ளது.

முன்னதாக, பிப்ரவரி 15ஆம் தேதி கோஹ்லி - அனுஷ்கா இணையர், ஆண் குழந்தைக்குப் பெற்றோராயினர். அவர்களுக்கு ஏற்கெனவே மூன்று வயதில் வாமிகா என்ற மகள் இருக்கிறாள்.

குறிப்புச் சொற்கள்