ஐபிஎல் விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் மோதல் (காணொளி)

1 mins read
a72a3cd2-05eb-4e7c-a5a3-a380d41fd152
படம்: டுவிட்டர் -

ஐபிஎல் எனப்படும் இந்திய கிரிக்கெட் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

சனிக்கிழமை (ஏப்ரல் 29) இரவு நடந்த ஆட்டத்தில் டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் விளையாடின. ஆட்டம் டெல்லியில் நடந்தது.

ஆட்டத்தைக் காண இரு அணிகளின் ரசிகர்களும் விளையாட்டு அரங்கில் குவிந்திருந்தனர். அப்போது ரசிகர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

ரசிகர்களின் சண்டை குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. ஐந்து, ஆறு பேர் மோதிக்கொண்டது காணொளியில் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

முதலில் பந்தடித்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழந்து 197 ஓட்டங்கள் குவித்தது.

இலக்கை விரட்டிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 188 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சிறப்பாகப் பந்து வீசியதோடு, பந்தடிப்பில் ஓட்டங்களையும் குவித்த மிட்செல் மார்‌ஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

குறிப்புச் சொற்கள்