டி20 உலகக் கிண்ணம்: அர்ஷ்தீப் சிங் தவறுக்கு மன்னிப்பு கேட்ட சூர்ய குமார்

டி20 உலகக் கிண்ணம்: அர்ஷ்தீப் சிங் தவறுக்கு மன்னிப்பு கேட்ட சூர்ய குமார்

1 mins read
0cb27fa2-15bf-474b-9e82-f4b973de6a9e
நியூசிலாந்து வீரரிடம் மன்னிப்பு கேட்ட இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ். - படம்: டைம்ஸ் ஆப் இந்தியா
Google News Preferred Icon

புதுடெல்லி: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தினால் அடித்ததாகக் கூறப்பட்டது. அவரின் அச்செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அச்சம்பவத்திற்காக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், டேரில் மிட்செல்லிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அர்ஷ்தீப் சிங்கின் செயலுக்காக அவரின் இறுதிப் போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15 விழுக்காட்டை அபராதமாகவும் ஒரு தகுதி இழப்புப் புள்ளியையும் அனைத்துலக கிரிக்கெட் வாரியம் விதித்தது.

குறிப்புச் சொற்கள்