டி20: அதிரடியாக ஆடி பதிலடி தந்த வாஷிங்டன்

1 mins read
9e3afbb5-1849-4b26-9e84-04e80669f83e
23 பந்துகளில் 49 ஓட்டங்களை விளாசிய இந்திய ஆட்டக்காரர் வாஷிங்டன் சுந்தர். - படம்: இபிஏ
multi-img1 of 2

ஹோபார்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 எனச் சமநிலைக்கு வந்துள்ளது.

இந்திய அணியில் விக்கெட் காப்பாளர் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ஜித்தேஷ் சர்மா சேர்க்கப்பட்டார்.

பூவா தலையாவில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது.

அதனையடுத்து, முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் (6), ஜோஸ் இங்லிஷ் (1) எனத் தொடக்கத்திலேயே இருவரை வெளியேற்றினார் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.

அதன்பின், அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் (11), மிட்செல் ஓவன் (0) என இருவரும் வருண் சக்கரவர்த்தியின் சுழலில் சிக்கினர்.

ஆயினும், டிம் டேவிட்டும் (74) மார்க்கஸ் ஸ்டோய்னிசும் (64) அதிரடியாக ஆடி ஓட்டம் குவித்தனர். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களைச் சேர்த்தது.

அதன்பின் பந்தடித்த இந்திய அணி வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்க ஓட்டங்களை எடுத்தனர்.

ஆறாவது வீரராகக் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் மூன்று பவுண்டரி, நான்கு சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம், ஒன்பது பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே இந்திய அணி வெற்றியைச் சுவைத்தது.

நான்காவது போட்டி வரும் வியாழக்கிழமை (நவம்பர் 6) கராராவில் நடக்கவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்