பாரிஸ் ஒலிம்பிக்: ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

பாரிஸ் ஒலிம்பிக்: ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

1 mins read
0c7e77fe-9d0b-485c-9ddf-33db06b70c4b
ஹாக்கி ஆடவர் பி பிரிவில் 2ஆம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகளின் ஹாக்கி ஆடவர் ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அர்ஜெண்டினா, அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்திய அணியும் இடம் பெற்றுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

‘பி’ பிரிவு ஹாக்கி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா 3 -2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

மந்தீப் சிங், விவேக் சாகர் பிரசாத், ஹர்மன்ப்ரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் 2ஆம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்